இந்தியா

ஏழைக் குழந்தைகளுக்கு கோயில் வளாகத்தில் பாடம் கற்பிக்கும் காவலர்

Veeramani

டெல்லி செங்கோட்டைக்கு அருகிலுள்ள கோயில் வளாகத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறார் ஒரு போலீஸ்காரர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள வசதியின்றி தவிக்கின்றனர். இந்த சூழலில்தான் டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள் தான்சிங், டெல்லி செங்கோட்டையின் அருகேயுள்ள கோயில் வளாகத்தில் தினமும் அப்பகுதியிலுள்ள ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.

இதுபற்றி கூறும் தான்சிங்" கொரோனா தொற்று ஆரம்பித்து பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்தே நான் இந்த வகுப்பை நடத்தி வருகிறேன். இந்த குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளில் படிக்க முடியாது. அவர்கள் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் படித்தால்தான் அவர்கள் மோசமான செயல்கள் மற்றும் கூட்டு குற்றத்தில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்" என்று கூறுகிறார்