ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை கைது செய்து டெல்லி காவல்துறை விசாரனை செய்து வருகின்றனர்.
கடந்த 6 மாத காலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறி நிறைய பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி என பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கண்காணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று டெல்லியில் அவ்வாறு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
குடியரசு தினங்களுக்காக தலைநகர் டெல்லி கோலாகலமாக தயாராகி வருகிறது. இதில் அசம்பாவிதங்கள் நடத்த திட்டமிட்டார்களா? அல்லது வேறு யாரும் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். டெல்லியில் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருவதாக சிறப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.