இந்தியா

“கால்நடைகள் மீதான வன்கொடுமைகளை கண்டுகொள்வதில்லை”- டெல்லி போலீஸ் மீது புகார்

“கால்நடைகள் மீதான வன்கொடுமைகளை கண்டுகொள்வதில்லை”- டெல்லி போலீஸ் மீது புகார்

Rasus

கால்நடைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை டெல்லி போலீசார் கண்டுகொள்வதில்லை எனவும் அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை எனவும் வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் ஆகியோர் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆங்காங்கே தொடர் கதையாகித்தான் வருகின்றன. சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்கப்பட்ட பின்னரும்கூட இதுபோன்ற சம்பவங்கள் கயவர்களால் நிகழ்த்தப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க கால்நடைகள் மீது மனிதர்கள் நடத்தும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கின்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சினை ஆடு ஒன்று 8 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது. இதில் அந்த ஆடு, வயிற்றில் இருந்த குட்டிகளுடன் பரிதாபமாக உயிரிழந்தது. ஹரியானா மாநிலத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது.  கடந்த ஆண்டு கால்நடைகள் மீதான வன்கொடுமைகள் குறித்து டெல்லியில் இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுமட்டுமின்றி விலங்குகள் கடத்தல் தொடர்பாக சமீபத்தில் 25 முதல் 30 வழக்குகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கால்நடைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை டெல்லி போலீசார் கண்டுகொள்வதில்லை எனவும் அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை எனவும் வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது. அதாவது கால்நடைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து கட்டாயமாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.