கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் X
இந்தியா

டெல்லி | சோனம் வாங்சுக் மனைவி மீது தாக்குதலா..? காவல்துறை மறுப்பு!

டெல்லி போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி தாக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், தனிப்பட்ட நபர்கள் யாரையும் இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று காவல் துறை விளக்கம் கொடுத்துள்ளது..

Rishan Vengai

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கீதாஞ்சலி ஆங்மோ மீது டெல்லி காவல்துறை தாக்குதல் நடத்தியதாக X தளத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை, அந்த குற்றச்சாட்டுகள் தவறானவை, வழிகாட்டும் வகையிலானவை, ஆதாரமற்றவை என்று அதிகாரப்பூர்வ மறுப்பு வெளியிட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தின் போது, சமூகஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவியும் சக செயல்பாட்டாளருமான கீதாஞ்சலி ஆங்மோவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து டெல்லி காவல்துறை தாக்கியதாகச் சமூகவலைத்தளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வ மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி காவல்துறையின் அறிவிப்பில், "சமூக ஆர்வலர்சோனம் வாங்சுக்கின் மனைவி டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகவும், அவரது தலைமுடிபிடித்து இழுக்கப்பட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் வழிகாட்டத் தவறக்கூடியவை. தனிப்பட்ட நபர்கள் யாரையும் இலக்குவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை; மேலும் வன்மத்துடன் கூடிய பலப்பிரயோகமோ அல்லது தனிப்பட்டமுறையில் தாக்குதல்களோ நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை." என தெரிவித்துள்ளது.

முன்னதாக, 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தலைமைச் செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ், "கீதாஞ்சலிஆங்மோடெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டார்" என்று X தளத்தில்பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதப் பொருளான நிலையில்,டெல்லி காவல்துறை அதற்கு உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.