இந்தியா

டெல்லி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு

டெல்லி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு

webteam

டெல்லி மெட்ரோ ரயிலில் 5 கி.மீ தூரத்திற்கு மேல் பயணம் செய்பவர்கள், இனி 10 ரூபாய் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் மெட்ரோ ரயில் மூலம் நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயிலின் பயணச்சீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட நிர்வாகம், ரூ.10 உயர்த்தி அறிவித்தது. அதன்படி 5 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்கள், மேற்கொண்டு 10 ரூபாய்  கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பயணிகள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.