டெல்லியில் காற்று மாசுபாடு web
இந்தியா

தீவிரமான டெல்லி காற்று மாசுபாடு.. சீனா தலைநகர் சாதித்தது எப்படி?

டெல்லியில் காற்று மாசுபடுவது தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், இதே பிரச்னையை சீனாவின் தலைநகரில் எப்படி சரிசெய்தார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்..

PT WEB

டெல்லி காற்று மாசுபாடு பிரச்சினைக்கு சீனாவின் பெய்ஜிங் எடுத்த நடவடிக்கைகள் உதாரணமாக இருக்கலாம். பெய்ஜிங்கில் மின்சார வாகனங்கள், பழைய வாகனங்களை அகற்றுதல், டீசல் லாரிகளின் உமிழ்வுகளை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் காற்று மாசு குறைக்கப்பட்டது.

டெல்லி காற்று மாசுபாடு தீவிர பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்ட விதம், டெல்லியின் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

டெல்லி

பெய்ஜிங்கில் 2008 ஒலிம்பிக்கை ஒட்டி காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிகளும் அமல்படுத்தப்பட்டன.

பெய்ஜிங்கில் எப்படி சரிசெய்யப்பட்டது..?

பெய்ஜிங்கில் பொது போக்குவரத்திற்கு பயன்படும் வாகனங்கள், மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டன. Internal Combustion Engine கொண்ட கார்களை வாங்குவோருக்கு, பதிவெண் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டது. பழைய வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டன. டீசல் லாரிகளின் உமிழ்வுக்கான தரநிலைகள் கடுமையாக்கப்பட்டன.

டெல்லி

அதேபோல், நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்புகளை புதுப்பித்தல், பசுமையான இடங்களை அதிகரித்தல், போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளால், சீனாவின் காற்றின் தரம் கடந்த பத்தாண்டுகளில், சுமார் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.