டெல்லியில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் பர்வீன் ரானா. இவர் கடந்த வருடம் மே 2ஆம் தேதி தனது சகோதரக்கு போன் செய்து தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு பதற்றமடைந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கழுத்தறுப்பட்ட நிலையில் சடலமாக இருந்த அவரது மனைவியின் சடலத்தை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பர்வீன் ராணாவை கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதன் காரணமாக கொலை நடைப்பெற்றதாக காவல்துறை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராணாவுக்கு ரூ.50,000 அபராதமும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் போது பேசிய நீதிபதி, கணவன் மனைவி இருவருக்குமிடையேயான உறவு வலுவானதாக இல்லை காவல்துறையின் முதற்கட்ட தகவல் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருந்தது. இவரின் குழந்தைகளும் தாய் - தந்தை இருவரும் தினமும் சண்டையிட்டு கொள்வார்கள் என நீதிமன்றத்தில் கூறியிருந்தனர். குழந்தைகளிடம் உங்கள் தாயை கொன்றது தந்தை தான் என யார் கூறியது எனக் கேட்டதற்கு ‘இவரை தவிர வேறு யார் செய்திருக்க முடியும்?’ என்றான். இதனையும் குழந்தையின் வாக்குமூலத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்குகிறது என்றார்.