இந்தியா

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் சிகிச்சை

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் சிகிச்சை

PT

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெய்ன் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தருக்கு இன்று காலை அதிக காய்ச்சலும், மூச்சுத்திணறல் பிரச்னையும் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் இன்று காலை டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

55 வயதான சத்தியேந்தர் ஜெய்ன் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ நேற்று இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டது. அதனால் நான் உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய அவரது தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.