இந்தியா

டெல்லி: சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - கெஜ்ரிவால் அறிவிப்பு

PT WEB

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. தலைநகரை உலுக்கிய இந்த சம்பவத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் அறிவித்தார்.