ராணா அய்யூப்  முகநூல்
இந்தியா

இந்துக் கடவுள் தொடர்பாக கருத்து - பெண் பத்திரிகையாளர் மீது வழக்குப் பதிவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

பிரபல பெண் பத்திரிகையாளர் ராணா அய்யூப் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் தவறான பரப்புரையை மேற்கொண்டதாக பெண் பத்திரிகையாளர் ராணா அய்யூப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், பத்திரிகையாளர் ராணா அய்யூப்பிற்கு எதிரான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாகக் கூறியதுடன், அவர் மீது வழக்குபதிவு செய்யவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து பிறரின் மத நம்பிக்கையை இழிவுப்படுத்துதல், இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் ராணா அய்யூப் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.