இந்தியா

என்.எஸ்.இ முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

webteam

தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் செல்போன்கள் ஓட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் அதன் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனை, தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் 'கோ-லொக்கேஷன்' ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள்.

இவ்வழக்கில் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணன் தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான வழக்கில் உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனைனா சர்மா, சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

இவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதேவழக்கில் மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.