ஷிகர் தவான், ஆயிஷா முகர்ஜி
ஷிகர் தவான், ஆயிஷா முகர்ஜி ட்விட்டர்
இந்தியா

"மனதளவில் மனைவி என்னை துன்புறுத்துகிறார்”-விவாகரத்து பெற்றார் தவான்! மகனைக் காட்ட நீதிமன்றம் உத்தரவு

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். இவர், ஏற்கெனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை, கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜோராவர் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆயிஷா முகர்ஜி

இதையடுத்து, ஆயிஷா, ’தன்னை மனதளவில் துன்புறுத்துவதாகவும் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும்’ எனக் கேட்டு ஷிகர் தவான் டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் புகார் அளித்தார். மேலும் ’கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஆயிஷாவும், தானும் இணைந்து வாழவில்லை என்றும், ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஆயிஷா, திருமணத்திற்குப் பின்னர் தன்னுடன் இந்தியாவிலேயே இருப்பதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து அவரது இரண்டு மகள்களையும் தத்தெடுத்துக் கொண்டேன்’ எனவும் ஷிகர் தவான் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: அதிமுகவை தொடர்ந்து பாஜகவுக்கு மேலும் அடி; பவன் கல்யாண் கட்சியும் விலகல்! 2019-க்கு பின் நடந்ததுஎன்ன?

இதுகுறித்து நீதிமன்றம் நடத்திய விசாரணையில் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜி தவானை மனரீதியில் டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. மேலும் ஷிகர் தவான் பணத்தில் ஆஸ்திரேலியாவில் மூன்று வீடுகளை வாங்கிவிட்டு அதனை தமது பெயருக்கு எழுதிக் கொடுக்க ஆயிஷா முகர்ஜி, தவானை வற்புறுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும், தமது முன்னாள் கணவருக்குப் பிறந்த மகள்களின் கல்விச் செலவை ஷிகர் தவான் ஏற்றுக்கொண்டு மாதம் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் ஆயிஷா முகர்ஜி கூறியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட பிரச்னையால்தான் ஷிகர் தவான், விவாகரத்துக்கு தாக்கல் செய்ததாகத் தெரிய வந்துள்ளது.

ஷிகர் தவான்

அப்போது, தனக்கும் ஆயிஷா முகர்ஜிக்கும் பிறந்த மகனை காண நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என ஷிகர் தவான் கூறியிருக்கிறார். ஷிகர் தவான் தரப்பு வைத்த குற்றச்சாட்டுக்கு, எந்த விளக்கமும் ஆயிஷா முகர்ஜி தரப்பிலிருந்து தரப்படவில்லை. இதையடுத்து, இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி ஹரிஷ் குமார் அறிவித்தார். மேலும் மகனை அடிக்கடி இந்தியா வந்து ஷிகர் தவானுக்கு காட்ட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும், ஷிகர் தவான் விரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மகனை பார்க்கலாம் என்றும் இருவரும் வீடியோ காலில் சந்தித்து உரையாட தாய் ஆயிஷா முகர்ஜி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிக்க: டெல்லி to தமிழகம்.. தொடரும் சோதனைகள்: யார்,யார் வீடுகளில்.. எதற்காக? கடந்த கால சோதனைகள் ஒரு லிஸ்ட்!