இந்தியா

இருக்கை தகராறில் சகமாணவனை பிளேடால் கீறிய கொடூரம்

webteam

வகுப்பறையில் ஏற்பட்ட தகராறில் சகமாணவனை பிளேடால் கீறிய கொடூரம் நடந்தேறியுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ளது படர்பூர். இது ஒரு வரலாற்று பிரசித்தி பெற்ற நகரமாகும். இந்த ஊரில் இயங்கி வரும் மத்திய பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் இடையே இருக்கை சம்பந்தமாக தகராறு நடந்துள்ளது. குறிப்பிட்ட இருக்கைக்காக இருவரும் சண்டைப்போடுவதை விலக்கிவிடாமல் மாணவர்கள் அனைவரும் சண்டையை வேடிக்கைப் பார்த்திருக்கின்றனர்.

சண்டையில் அதிக கோபமடைந்த மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனின் முதுகில் பிளேடால் கீறி இருக்கிறான். அதனால் அந்த மாணவனின் முதுகெலும்பின் நடுவே மிகப் பெரிய கீறல்கள் ஏற்பட்டுள்ளன. இது சம்பந்தமான புகைப்படங்களை ஏஎன்ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட மாணவன் ஆசிரியரிடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார். ஆகவே காவல்துறையில் இச்சம்பவம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.