டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 60 புள்ளி 42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில், 13 ஆயிரத்து 766 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அதிகபட்சமாக வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் 66.25 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின. அங்கு, ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம்தேதி எண்ணப்படுகின்றன.