டெல்லி தேர்தல் pt
இந்தியா

டெல்லியில் ஆட்சியை நோக்கி நகரும் பாஜக.. எத்தனை தொகுதிகள் முன்னிலை? முழு விவரம்!

டெல்லி சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், ஆட்சிக் கட்டிலில் அமரும் வகையில் முன்னிலை வகித்துவருகிறது பாரதிய ஜனதா கட்சி.

Rishan Vengai

70 தொகுதிகளை கொண்ட நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இதன் வாக்குகள் இன்று காலை 8 மணி் முதல் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் பணியில் 5000 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 19 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத்தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் சமீபத்திய நிலவரத்தின் படி 70 தொகுதிகள் அடங்கிய டெல்லியில் பாஜக 42 இடங்களில் முன்னிலை பெற்று அசத்திவருகிறது. கடந்தமுறை ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்த காங்கிரஸ் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.

முக்கிய வேட்பாளர்களை பொறுத்தவரையில், முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தற்போதைய முதல்வர் அதிஷி இருவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். மணிஷ் சிசோடியா முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக வருவார் என எதிர்ப்பார்க்கப்படும் பர்வேஷ் வர்மா முன்னிலையில் இருக்கிறார்.