டெல்லி சட்டமன்ற தேர்தல் pt
இந்தியா

விறுவிறுப்பாக தொடங்கியது டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை! முன்னிலை நிலவரம் என்ன?

முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஜெனிட்டா ரோஸ்லின்

70 தொகுதிகளை கொண்ட நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இதன் வாக்குகள் இன்று காலை 8 மணி் முதல் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் பணியில் 5000 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 19 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

காலை 8.30 நிலவரப்படி!

காலை 8.30 மணி நிலவரப்படி,

பாஜக - 19 இடங்களிலும்

ஆம் ஆத்மி - 16 இடங்களிலும்

காங்கிரஸ் - 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

  • டெல்லி தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் 60.42.

  • தேர்தல் களத்தில் 603 ஆண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டன.

  • தேர்தலில் மும்முனை போட்டி நிலவினாலும், பாஜக மற்றும் ஆம் ஆத்மிக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

இப்படி கடும் போட்டிக்கு மத்தியில் தலைநகர் டெல்லியின் அரியணையில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் இன்றைய தினம் கிடைத்துவிடும்.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா ஆம்ஆத்மி?

நான்காவது முறையும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் ஆம் ஆத்மியும், இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிடும் முனைப்பில் பாரதிய ஜனதாவும் செயலாற்றின.

முன்னதாக நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏழு இடங்களையும் பாஜக கைப்பற்றிய நிலையில், சட்டமன்ற தேர்தலில் கடந்த இரண்டு முறை அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி வெற்றிபெற்றது. இந்தவகையில், இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளத குறிப்பிடத்தக்கது.