இந்தியா

பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்: பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்

பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்: பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்

webteam

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைய வேண்டுமென்று இப்போது இருந்தே வழிபாடு நடத்துமாறு அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் டெல்லி திருச்சபைகளின் உயர்மறை மாவட்ட பேராயர் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி திருச்சபைகளின் உயர்மறை மாவட்ட பேராயர் அனில் கோட்டோ தனக்கு கீழுள்ள பாதிரியார்களுக்கு மே 13-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை வழிபாட்டு கூட்டத்தில் படிக்கவும் வைத்துள்ளார். பாரதிய ஜனதா சிறுபான்மையினரின் மத நம்பிக்கையை மதிப்பதில்லை என்று கடிதத்தில் அனில் கோட்டோ கூறியுள்ளார்.

மோடி பிரதமராக பதவியேற்றபின் கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுவதாக கோட்டோ கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டு 348 கிறிஸ்தவர்கள் மீதும், 2017-ல் 736 கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் எழுதியுள்ளார். இத்தகைய சூழல் நாட்டின் அரசியல் சாசனத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிப்பதாக கோட்டோ கூறியுள்ளார். இந்த அசாதாரண சூழலை முடிவுக்கு கொண்டுவர 2019 பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைய, அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளும் கடவுளை வழிபட வேண்டும் என்று தனது கடிதத்தில் அனில் கோட்டோ கேட்டுக்கொண்டுள்ளார். கோட்டோவின் கடிதத்துக்கு ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மறைமாவட்ட ஆயர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.