இந்தியா

பராமரிப்புப் பணி: மூடப்படுகிறது டெல்லி ரன்வே !

பராமரிப்புப் பணி: மூடப்படுகிறது டெல்லி ரன்வே !

webteam

பராமரிப்புப் பணி காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலைய ரன்வே, நவம்பர் 7-ம் தேதி மூடப்படுகிறது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் சுமார் 1,150-க்கும் அதிகமான விமானங்கள் வந்து செல்கின்றன. ஒரு மணி நேரத்தில் 67 விமானங்களை கையாள்கிறது இந்த விமான நிலையம். இங்கு மூன்று ரன்வே-க்கள் இருக்கின்றன. இதில் 11-29 என்ற ரன்வே-யில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நவம்பர் 7-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை மூடப்பட இருக்கிறது. இதனால் அந்த நாட்களில் அதிகமான விமானங்களை கையாள்வதை டெல்லி விமான நிலையம் குறைக்க இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு 45 விமானங்களை மட்டுமே கையாள முடிவு செய்துள்ளது. இதனால் சில விமான நிறுவனங்கள் தங்களின் சில விமான சேவைகளை கேன்சல் செய்ய உள்ளன. இத்தகவலை டெல்லி சர்வதேச விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.