இந்தியா

டெல்லியில் தொடரும் காற்று மாசு: 8 ரயில்கள் ரத்து!

டெல்லியில் தொடரும் காற்று மாசு: 8 ரயில்கள் ரத்து!

webteam

டெல்லியில் காற்று மாசின் அளவு அபாயகரமான அளவிலேயே தொடர்வதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசு, அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய காற்று மாசு காணப்படுகிறது.  

ஒருவாரத்திற்கும் மேலாக மாசு கலந்த பனிமூட்டம் நிகழ்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசு காரணமாக கடந்த 4 நான்கு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டன. முகமூடிகளை அணிந்தபடி மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். காற்று மாசு காரணமாக 69 ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. 8 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.