இந்தியா

டெல்லியில் சற்றே குறைந்த காற்று மாசு !

jagadeesh

தீபாவளிக்குப் பிறகு தலைநகர் டெல்லி காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது தீவிர நிலையில் இருந்த காற்று மாசு மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இதனால் டெல்லியில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

நேற்று காற்றின் தரக்குறியீடு 450-க்கும் கீழ் குறைந்திருந்த நிலையில், இன்று மேலும் 279 ஆக குறைந்தது. இருப்பினும் இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. இதற்கிடையே இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மாசு காரணமாக 10 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, மாணவர்கள் முகமூடி அணிந்தபடி பள்ளிக்குச் சென்றனர்.