டெல்லி காற்று மாசு
டெல்லி காற்று மாசு file image
இந்தியா

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு... மக்கள் அவதி!

PT WEB

டெல்லியில் தொடர்ச்சியாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் காற்று மாசால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தவிர, வாகனங்களுக்கு மாநில அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மேலும், 2 வாரங்களில் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து அண்டை மாநிலங்கள் உதவ வேண்டும் என டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லி காற்று மாசு

இந்தியாவின் முக்கியமான 8 நகரங்களில் டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் காற்று மாசின் அளவு கடந்தாண்டை விட இந்தாண்டு மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரம் சென்னை, பெங்களூரு, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்களில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் 8 முக்கிய நகரங்களில் காற்று மாசு குறித்த ஆய்வறிக்கையை Respire Living Sciences என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் PM 2.5 எனப்படும் காற்று மாசு குறியீட்டை அடிப்படையாக வைத்து மாசில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: சரவெடியாய் வெடித்த வேகப்பந்து வீச்சாளர்கள்.. முதல் அணியாக கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

இதன்படி டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளில் மாசின் அளவு 99.6, 131.5, 74, 109.1, 113.9 ஆக இருந்தது தெரியவந்துள்ளது. இங்கு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது மாசு சற்றே அதிகரித்துள்ளது. மும்பையில் காற்று மாசின் அளவு 27.7, 42.7, 41.4, 41, 58.3 என்ற அளவில் இருந்தது. கொல்கத்தாவில் காற்று மாசு 45.4, 33.3, 50.5, 33.7, 47.3 என்ற அளவுகளில் இருந்தது. ஹைதராபாத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் மாசின் அளவு 30.5, 48.5, 47.1, 33.4, 39.6 ஆக இருந்தது.

சென்னையை பொறுத்தவரை காற்று மாசு 23.5, 33.6, 24.3, 39.2, 29.9 ஆகிய அளவுகளில் இருந்தது. சென்னையில் கடந்தாண்டைவிட இந்தாண்டு மாசு கணிசமாக குறைந்துள்ளது. பெங்களூருவில் மாசு 18.9, 32.4, 30.6, 39.6, 35 என்ற அளவில் இருந்தது. அங்கும் மாசின் அளவு சற்றே குறைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் காற்று மாசு 79.3, 123, 57.4, 60.9, 60.4 என்ற அளவில் இருந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் காற்று மாசு 83.3, 71.6, 45.3, 66.9, 59.5 ஆக பதிவாகியிருந்தது.

இதையும் படிக்க: ’என்னைக் கேட்காமல் ஏன் டிரீம் செய்தாய்?’ - புருவத்தை அலங்காரம் செய்த பெண்ணிற்கு தலாக் கூறிய கணவர்!