மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேஎன்யு வளாகத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் மாணவர்கள் போராட்டத்தில் நேரில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.