இந்தியா

டெல்லி: ரூ.100 கடனை திருப்பித்தராத நபரை குத்திக்கொன்ற தம்பதி

டெல்லி: ரூ.100 கடனை திருப்பித்தராத நபரை குத்திக்கொன்ற தம்பதி

Veeramani

டெல்லியில் ரூ.100 கடனை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, தம்பதியினர் 40 வயது நபரைக் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ரேஷ்மாவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர், அவரது கணவர் ஜிதேந்தர் தப்பி ஓடிவிட்டார். உயிரிழந்தவர் மங்கோல்பூரியில் வசிக்கும் அஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின்போது, ஜிதேந்தர் அஜீத்திடம் ரூ .100 கடனை திருப்பி தருமாறு கேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அஜீத் சம்பவ இடத்திலேயே ஜிதேந்தரை அடித்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகு, "ஜிதேந்தர் தனது வீட்டிற்குச் சென்று, ஒரு கத்தியை எடுத்து வந்தார், அவருடைய மனைவியும் அவருடன் சென்றார். அவர்கள் அஜீத்தை கத்தியால் தாக்கி, அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக" போலீசார் தெரிவித்தனர். முழங்காலுக்கு கீழே குத்தப்பட்டதில் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அஜீத் உயிரிழந்தார் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.