இந்தியா

சாலை பேரணியால் காலதாமதம்: கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை..!

சாலை பேரணியால் காலதாமதம்: கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை..!

Rasus

தொண்டர்களின் சாலை பேரணியால் ஏற்பட்ட காலதாமதத்தால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்யவில்லை.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் வேட்புமனுவினை தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதற்குமுன் அவர் சாலை பேரணியில் பங்கேற்றார். சாலை பேரணியில் ஏற்பட்ட காலதாமதத்தால் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் கெஜ்ரிவால் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்யவில்லை.

முன்னதாக தொண்டர்களின் சாலை பேரணியில் பேசிய கெஜ்ரிவால், “ இவர்களை விட்டுவிட்டு என்னால் எப்படி செல்ல முடியும்” என கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன் நாளை தனது வேட்புமனுவினை தாக்கல் செய்ய இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.