ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வந்த தகவலை பாதுக்காப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்பு துறை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய பாதுகாப்புத்துறை சரியானப் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் விடுமுறையில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியானது. புட்காம் மாவட்டத்தில் உள்ள காஸிபுராவில் உள்ள தனது வீட்டில், அவர் இருந்தபோது பயங்கரவாதிகள் சிலர், துப்பாக்கி முனையில் கடத்தியதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இந்த தகவலை பாதுக்காப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. ராணுவ வீரர் முகமது யாசின் கடத்தப்படவில்லை என்றும் பத்தி ரமாக இருப்பதாகவும் இதுதொடர்பான யூகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.