சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘சுகோய் 30 எம்கேஐ’ ஜெட் ரக போர் விமானத்தில் பறந்து அதன் செயல்திறனை அறிந்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப் படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் புறப்பட்ட அவர் மொத்தமாக 45 நிமிடங்கள் விமானத்தில் இருந்து அதன் செயல்திறனை அறிந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது. அவசர காலத்தில் பாதுகாப்பு துறையின் தயார் நிலையை இதனால் அறிய முடிந்தது” எனத் தெரிவித்தார்.