மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘சுகோய் 30 எம்கேஐ’ ஜெட் ரக போர் விமானத்தில் பறந்து அதன் செயல்திறனை அறிந்து கொண்டார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திரா காந்திக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவியேற்று கொண்ட 2-ஆவது பெண் என்ற பெருமையும் இந்திரா காந்திக்கு உண்டு.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘சுகோய் 30 எம்கேஐ’ ஜெட் ரக போர் விமானத்தில் பறந்து அதன் செயல்திறனை அறிந்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் புறப்பட்ட அவர் மொத்தமாக 45 நிமிடங்கள் போர் விமானத்தில் இருந்து அதன் செயல்திறனை அறிந்துகொண்டார். சமீபத்தில் ஐஎன்எஸ் விக்ரமாதித்தியா போர்க் கப்பலிலும் நிர்மலா சீதாராமன் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.