இந்தியா

காஷ்மீருக்கு நாளை செல்கிறார் நிர்மலா சீதாராமன்?

காஷ்மீருக்கு நாளை செல்கிறார் நிர்மலா சீதாராமன்?

webteam

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஷ்மீருக்கு நாளை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுரத் தாக்குத லை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செயல்படுத்தியது. இதையடுத்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும்
பாகிஸ்தானுக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கும் உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான நட வடிக்கைகளை இந்தியா, அதிரடியாக எடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய இந்திய விமானி, பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந் தார். அவரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை காஷ்மீர் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் காஷ்மீரைச் சேர்ந்த அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் செல்கிறார் என்று கூறப்படுகிறது. காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரை அவர் நேரில் சந்தித்து பேசு கிறார் என்று தெரிகிறது.