அடையாள அட்டையை காட்டிவிட்டு செல்லுங்கள் என்ற பாதுகாப்பு வீரருக்கு உரிய மரியாதை கொடுத்த நடிகை தீபிகா படுகோனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தீபிகா படுகோன் ஒரு இந்தி திரைப்பட நடிகை ஆவார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, 2006 ஆம் ஆண்டில் முதன்முறையாக "ஐஸ்வர்யா" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு "ஓம் ஷாந்தி ஓம்" என்ற இந்தி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகம் ஆனார்.
இவருடைய இந்தச் செயல்பாடு இவருக்கு நல்ல வரவேற்பை தந்து பிலிம் பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை பெற்று தந்தது. இதனுடன் இவருக்கு முதல் பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நடித்த பத்மாவதி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் திரௌபதி அம்மனை இழிவுப்படுத்தியதாக கருதி, சில அமைப்பினர் இந்தப் படத்திற்கும் அவருக்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் தீபிகா படுகோன் தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 5 கோடி தரப்படும் எனக்கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தினர்.
இவர் தமிழில் நடித்த ஒரே படம் கோச்சடையான். இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தார். தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ் படுக்கோன் சர்வதேச அளவில் மதிப்புள்ள பூப்பந்தாட்ட வீரர் ஆவார்.
இந்நிலையில், தீபிகா படுகோன் தனது தந்தை பிரகாஷ் படுகோனுடன் மும்பை ஏர்போர்ட்டில் விமானத்தைப் பிடிக்க சென்றார். அப்போது பாதுகாப்பு வீரரிடம் எந்த ஆவணங்களையும் காண்பிக்காமல் உள்ளே சென்றனர். ஆனால் அங்கிருந்த பாதுகாப்பு வீரர் அடையாள அட்டையை காட்டிவிட்டு செல்லுங்கள் எனக்கூறியுள்ளார். இதையடுத்து உள்ளே சென்று கொண்டிருந்த தீபிகா படுகோன் திரும்ப வந்து அட்டையை காட்ட வேண்டுமா எனக்கேட்டு எடுத்துக் காட்டினார்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு வீரர் அனுமதிக்கவே அவர்கள் உள்ளே சென்றனர். பாதுகாப்பு வீரருக்கு உரிய மரியாதை கொடுத்த நடிகை தீபிகா படுகோனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறன. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.