இந்தியப் பெருநிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் இடம்குறைந்துகொண்டே வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தொகுப்பைப் பார்க்கலாம்.
இன்று பெண்கள் பலரும் தன் சொந்தக்காலில் நின்று குடும்பத்தை முன்னேற்றுவதுடன், நிறுவனத்தின் உயர்ந்த பொறுப்புகளில் பணி புரிகின்றனர். அந்த வகையில், 46 சதவீதப் பெருநிறுவனங்களில்10லிருந்து 30 சதவீதம் வரை பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். 24 சதவீதப் பெருநிறுவனங்களில் 30லிருந்து 50 சதவீதம்வரை தலைமைப் பொறுப்புகளில் பெண்கள்இருக்கிறார்கள். 20 சதவீதப் பெருநிறுவனங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். 10 சதவீதப் பெருநிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் முற்றிலுமாக இல்லை.
பெண்கள் பணியிலிருந்து விலகுவதற்குச் சொந்தவாழ்க்கைக்கும் பணி வாழ்க்கைக்கும் இடையே சமநிலை காண முடியாததும், சோர்வும் 48 சதவீதம் காரணமாக இருக்கின்றன. வீட்டுப்பொறுப்புகள், குழந்தைகள், முதியவர்களைப் பராமரித்தல் போன்றவை 38லிருந்து 40 சதவீதம் காரணமாக இருக்கின்றன. கலாசாரம், பாரபட்சம், பெண்களை உள்ளடக்காத தன்மை போன்றவை 17 சதவீதம் காரணமாக இருக்கின்றன. பணி வாழ்க்கையில் வளர்ச்சி அடைய வாய்ப்பில்லாதது 13 சதவீதம்காரணமாக இருக்கிறது. அமைப்புரீதியான, நிறுவனரீதியான பிரச்னைகள் 10 சதவீதம் காரணமாக இருக்கின்றன.