இன்றைய காலை தலைப்புச் செய்திகள் Facebook
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராக்கெட் To உலக மக்கள் தொகை கணிப்பு!

2024ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசு கணிப்பு. கடந்தாண்டை விட பிறப்புகள் 0.9% குறைவு என்றும் அறிக்கை.

PT WEB
  • ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்திற்காக வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-C 60 ராக்கெட். இரு விண்கலங்களும் திட்டமிட்டபடி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் அறிவிப்பு.

  • கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கட்டப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

  • கடலில் கம்பீரத்துடன் நிற்கும் திருவள்ளுவர் சிலைக்கு பேரறிவு சிலை என பெயர் சூட்டினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் நேரில் விசாரணை.

  • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம். மேலும், மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

  • தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்திப்பு. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து புகார் மனு.

  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநரிடம் விஜய் நேரில் வலியுறுத்தல்.

  • தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் விஜய் பீகார், ஒடிஷாவுக்கு சென்று பார்க்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி விமர்சனம்.

  • ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம்.

  • சீமானுக்கு எதிரான வழக்கில் காவல்துறை அதிகாரி வருண் நீதிமன்றத்தில் ஆஜர். மேலும், சீமானின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என்றும் பேட்டி.

  • யூ-டியூபர் டிடிஎஃப் வாசன் பாம்புடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த விவகாரம். சென்னை திருவொற்றியூரில் செல்லப்பிராணிகள் விற்பனையகத்தில் வனத்துறையினர் சோதனை.

  • கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்திக்கும், மாநகராட்சி காங்கிரஸ் கட்சி மேயர் சரவணனுக்கும் இடையே வாக்குவாதம். இந்நிலையில், மேயர் கொலை செய்யப்பார்க்கிறார் என கவுன்சிலர் கூச்சல். மேலும், நெஞ்சு வலிப்பதாக கூறி கீழே விழுந்து மேயர் அலறல்.

  • 2024ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசு கணிப்பு. கடந்தாண்டை விட பிறப்புகள் 0.9% குறைவு என்றும் அறிக்கை.