Morning Headlines facebook
இந்தியா

Headlines|பதவி உயர்வு பெற்ற எஸ்.பி. வருண் குமார் To கொசு-வுக்கு முதலிடம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பதவி உயர்வு பெற்ற எஸ்.பி. வருண் குமார் To மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில் கொசு-வுக்கு முதலிடம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • பிஎஸ்எல்வி-C 60 ராக்கெட் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் டாக்கிங் பணிகளுக்காக புதிய செயற்கைக்கோள்கள் இன்று விண்ணில் ஏவப்படும்.

  • தமிழ்நாடு முழுவதும் ஐம்பதுக்கும் அதிகமான ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளநிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

  • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 70 பேருக்கு பணியிட மாற்றம் , 5 பேருக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு.

  • சட்டமன்ற தேர்தல் குறித்து தூத்துக்குடியில் திமுக நிர்வாகிளுடன் முதலமைமச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து அறிவுறுத்தல்.

  • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற பதாகைகளுடன் அதிமுக போராட்டம்.

  • சாமானியனை பாதிக்கும் பிரச்னையில் அரசியல் ஒருபோதும் இருக்க முடியாது என அண்ணாமலை பாராட்டு.

  • சம்பந்தமில்லாத வெளி நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அறிவுறுத்தல்.

  • பாமக இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக மோதல் வெடித்த நிலையில் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு. முகுந்தன் தொடர்பான கேள்விக்கு, உட்கட்சி பிரச்சினையை பேசி தீர்த்து கொள்வதாக பதில்.

  • சென்னை புத்தகத் திருவிழா அலைமோதும் வாசகர்கள் கூட்டம். விடுமுறை நாளான நேற்று ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை.

  • மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில் கொசு-வுக்கு முதலிடம். ஆண்டிற்கு 10 லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தகவல்.

  • பாகிஸ்தானில் மணமகள் வீட்டின் மீது விமானம் மூலம் பண மழை. மாப்பிள்ளை வீட்டாரின் செயலால் இன்ப அதிர்ச்சியடைந்த உறவினர்கள்.

  • தென்கொரியாவில் விமானம் தரையிறங்கிய போது வெடித்து சிதறியதில் 179 பேர் உயிரிழப்பு. பறவை மோதியதால் விமானம் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது.

  • இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வெற்றி இலக்காக 340 ரன்களை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

  • பாகிஸ்தானை வீழ்த்தி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்ரிக்கா. ஆஸ்திரேலியாவை 2 போட்டிகளில் வீழ்த்தினால் மற்றொரு அணியாக இந்தியாவுக்கு வாய்ப்பு.