Headline facebook
இந்தியா

Headlines | தமிழகத்தை புகழ்ந்த ஆளுநர் முதல் திருச்செந்தூர் கடல் அரிப்பு தொடர்பாக நடந்த ஆய்வு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழகத்தை புகழ்ந்த ஆளுநர் முதல் திருச்செந்தூர் கடல் அரிப்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம். வடகிழக்கு மாநில பெற்றோர் பெண் குழந்தைகளை படிக்க வைக்க தமிழகத்திற்கே அனுப்ப விரும்புவதாகவும் பேச்சு.

  • வள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட காத்திருக்கும் கூட்டத்தை தடுக்கும் அரணாக தமிழர்கள் இருக்க வேண்டும் என்றும், திருவள்ளுவரை யாரும் கபளீகரம் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

  • கடன் வாங்கும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். திமுக ஆட்சிக்கு வந்த பின் கடன் 26 சதவீதத்தை தாண்டிவிட்டதாகவும் பேட்டி.

eps, mk stalin
  • ஈரோடு இடைத்தேர்தலில் பெரியார் கொள்கைகளை கூறி வாக்கு சேகரிக்க முடியுமா? என திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.

  • டங்ஸ்டன் விவகாரத்தில் நாளை தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல். கோமியம் குடிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பொறுத்தது எனவும் பேட்டி.

  • செவ்வாய், வெள்ளி, யுரேனஸ் உள்ளிட்ட 6 கோள்களும் ஒரே நேர் கோட்டில் வந்த அரிய நிகழ்வு. கோளரங்கங்களில் கண்டுகளித்த மக்கள்.

Six Planets in a Spectacular Planet Parade
  • கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையிடு தள்ளுபடி. மாநில அரசின் விசாரணையில் திருப்தி இல்லை என்பதால்தான் சிபிஐக்கு மாற்றம் என உச்ச நீதிமன்றம் விளக்கம்.

  • திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கடல் அரிப்பு விவகாரம் சென்னை ஐஐடி நிபுணர் குழு நேரில் ஆய்வு.

  • குவைத் நாட்டில் குளிர் காய தீ மூட்டிய போது புகை மூட்டத்தில் சிக்கி 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு; இறந்தவர்களின் உடலை எடுத்து வர போதிய வசதி இல்லை என குடும்பத்தினர் வேதனை.

  • அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்ற திட்ட கட்டுப்பாடு, பனாமா கால்வாய் மீட்பு திட்டத்திற்கு எதிர்ப்பு. மெக்சிகோ, பனாமா நாடுகளில் வலுக்கும் போராட்டம்.

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச். பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை சபலங்காவும் அரையிறுதிக்கு முன்னேற்றம்.