தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம். பொங்கல் பொருட்களை வாங்க குவிந்ததால் களைகட்டிய சந்தைகள்.
ஜல்லிக்கட்டுக்கு தயார் நிலையில் அவனியாபுரம். 7 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில் வீரர்கள், காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை.
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு. அனைவரும் நல்ல மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துவதாக எக்ஸ் சமூக தளத்தில் பதிவு.
தமிழ்நாடு எல்லா நிலையிலும் ஏற்றம் பெற உழைப்போம் என்றும், நன்னாளை எழுச்சியோடு கொண்டாடுவோருக்கு தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து.
பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என பதிவிட்ட தவெக தலைவர் விஜய். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை குறிப்பிடும் விதமாக பதிவு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பு கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்ட இயந்திரங்கள்.
ஈரோடு அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் கையில் கத்தியால் கீறிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். பாரம்பரிய திருவிழாவில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு.
இன்று நடைபெறவிருந்த NET தேர்வு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒத்திவைப்பு. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று யுஜிசி நடவடிக்கை.
எல்லையில் வேலி அமைப்பதில் ஒப்பந்த நடைமுறைகளை பின்பற்றுவதாக வங்கதேசத்திடம் இந்தியா விளக்கம். இந்தியாவிற்குள் எல்லை கடந்த குற்றங்களை தடுக்க ஒத்துழைப்பு அளிக்கவும் வலியுறுத்தல்.
அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்றால் நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் கேள்வி.