Headlines facebook
இந்தியா

Headlines | கார் பந்தயத்தில் வெற்றிப்பெற்ற அஜித் குமார் முதல் மார்ச்சில் தொடங்கும் ஐபிஎல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, கார் பந்தயத்தில் வெற்றிப்பெற்ற அஜித் குமார் முதல் மார்ச்சில் தொடங்கும் ஐபிஎல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது. ஒன்றரை மாதம் நடைபெறும் விழாவில் 40 கோடி பேர் குவிவார்கள் என எதிர்பார்ப்பு.

  • போலியான டோக்கன்களை பயன்படுத்தி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு காவல்துறை எச்சரிக்கை.

  • நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி என புகார். நியாய விலைக்கடைகளில் விலையில்லா வேட்டி, சேலைகளின் இருப்பு குறைவாக இருப்பதாக தகவல்.

  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜகவும் அறிவிப்பு. அதிமுக, தேமுதிகவும் ஏற்கனவே புறக்கணித்துள்ளதால் இரு முனைப்போட்டி சூழல்.

  • இந்திய அரசமைப்பை ஏற்றுக்கொள்ளாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என தேசிய கீத விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கண்டனம்.

  • ஆளுநர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில். சட்டமன்றத்துக்குள் நடைப் பயிற்சி மேற்கொண்டவர்தான் என்றும் விமர்சனம்.

  • 48ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு. 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை ஆனதாகத் தகவல்.

  • மேளதாளம் முழங்க பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது திருவாபரண ஊர்வலம். மகர ஜோதி தரிசன நாளான 14 ஆம் தேதி சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு.

  • ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்குவதாக பிசிசிஐ அறிவிப்பு. பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்.

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சபலென்கா. தனது பிரபலமான டிக்டாக் நடனத்தை ஆடி மகிழ்ச்சி.

  • துபாய் கார் பந்தயத்தில் 3 ஆவது இடம் பிடித்த நடிகர் அஜித் குமாரின் அணிக்கு குவியும் வாழ்த்துகள். தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க வாழ்த்துவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு.