இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|ஸ்ரீரங்கம் கோயில் பரமபத வாசல் - L&T நிறுவனரின் சர்ச்சை கருத்து!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஸ்ரீரங்கம் கோயில் பரமபத வாசல் முதல் L&T நிறுவனரின் சர்ச்சை கருத்து வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் அதிகாலை 5.15 மணியளவில் பரமபத வாசல் திறப்பு. பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்த ரங்கநாதர், விண்ணை அதிரச் செய்த கோவிந்தா முழக்கம்.

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பை காணக் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு கோலாகலம்..

  • வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பரமபத வாசல் திறப்பு. லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே காத்திருப்பு.

  • சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் நாளை இயக்கம். முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம்..

  • இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற அனைத்து மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்.

  • அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்யக் கோரிக்கை.

  • குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றின் அருகே டாஸ்மாக் அமைப்பது குறித்த கட்டுப்பாடுகளை விதிக்கும் குழு மாற்றி அமைப்பு. டிஜிபி தலைமையில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோரை குழுவில் நியமித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

  • திருப்பதி மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் வந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் - முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. இரு கட்சிகளின் தொண்டர்களும் முழக்கமிட்டுக் கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பதற்றம்.

  • தன்பாலின திருமணத்திற்கு எதிரான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு. சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு.

  • ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என L&T நிறுவனர் சுப்பிரமணியன் சர்ச்சை கருத்து. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள் இப்படி கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக நடிகை தீபிகா படுகோன் ஆதங்கம்.

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி இருப்பேன் எனவும், வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு தனக்கு அதிகமாக இருந்தது என்றும் அதிபர் ஜோ பைடன் கருத்து.

  • லெபனான் நாட்டின் புதிய அதிபராக ராணுவ தலைமை தளபதி ஜோசப் அவோன் பதவியேற்பு. அதிபர் மாளிகையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு.

  • பொங்கல் பண்டிகையையொட்டி இன்று ரிலீசாகும் புதிய படங்கள்.. ஷங்கரின் "கேம் சேஞ்சர்", பாலாவின் "வணங்கான்" படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு.