நிமிஷா பிரியா முகநூல்
இந்தியா

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து..!

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா கடந்த 2008ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்று தனியாக கிளினிக் தொடங்குவதற்காக அந்நாட்டு சட்டப்படி உள்ளுறை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து 2014ம் ஆண்டு தனியாக கிளினிக் தொடங்கினார். ஆனால், அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிமிஷா கொடுத்த புகாரின் பேரில் மஹ்தி கைது ஏமன் நாட்டு காவல்துறையால் செய்யப்பட்டார்.

பின்னர் சிறையில் இருந்து மஹ்தி வெளியே வந்த பிறகு, நிமிஷாவை மிரட்டியதோடு அவருடைய பாஸ்போர்ட் ஒப்படைக்கவும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் செவிலியர் நிமிஷா கொடுத்த மயக்க மருந்து காரணமாக தலால் அப்தோ உயிரிழந்தார்.

நிமிஷா பிரியா

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஜூலை 16ம் தேதி அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி இந்தியா முழுவதும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் உத்தரவின் பேரில், ஏமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸ், தலால் அபு மஹதி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, நிமிஷாவின் தண்டனை தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், நிமிஷா பிரியாவின் மகள் மிஷெல் , தன் தாயை காப்பாற்றக்கோரி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், ”நான் உன்னை நேசிக்கிறேன் அம்மா. தயவுசெய்து என் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர உதவுங்கள். நான் அவளைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். நான் உன்னை மிஸ் செய்கிறேன் அம்மா” என அதில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது" என்று முஸ்லியாரின் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையை செய்தி நிறுவனமான ANI மேற்கோளிட்டு காட்டியுள்ளது.

இருப்பினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.