இந்தியா

இறந்தவர் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற உறவினர்கள்

இறந்தவர் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற உறவினர்கள்

webteam

அஸ்ஸாம் மாநிலத்தில் இறந்து போன ஒருவரின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற கொடுமை நிகழ்ந்துள்ளது.

அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவாலின் தொகுதியிலேயே இந்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது. மஜுலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த ஒருவரின் உடலை சாலை வசதி இல்லாததால் அவரது சகோதரர் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார். இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் வாகனத்தைத் தயார் செய்வதற்குள் குடும்பத்தினர் அவரது உடலை எடுத்துச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.