இந்தியா

புதிய லோகோவுக்கு ரூ.1 லட்சம் பரிசு: தூர்தர்ஷன்

புதிய லோகோவுக்கு ரூ.1 லட்சம் பரிசு: தூர்தர்ஷன்

webteam

தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் அதன் லோகோவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

டிடி எனப்படும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி கடந்த 58 ஆண்டுகளாக இருக்கும் சேனல் லோகோவை மாற்ற திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 23 சேனல்களை ஒளிபரப்பி வரும் தூர்தர்ஷன் புது பொலிவுடன் வெளிவரவுள்ளது. இளைய தலைமுறையினருடன் தூர்தர்ஷனை இணைக்கும் முயற்சியாக புதிய சின்ன வடிவமைப்புப் போட்டியை அறிவித்துள்ளது. சிறந்த லோகோ டிசைனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் தூர்தர்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டு லோகோவை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.