இந்தியா

தியாகராயர் ஆராதனையை பாதியில் நிறுத்திய தூர்தர்ஷன்: ட்விட்டரில் விளாசிய அமைச்சர்

webteam

திருவையாறு தியாகராயர் ஆராதனை விழாவில் இறுதிநாள் இசைக் கச்சேரி ஒளிபரப்பை பாதியில் நிறுத்திய தூர்தர்ஷன் சேனலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருவையாறு தியாகராயர் ஆராதனை விழாவின் இறுதிநாள் இசைக் கச்சேரியை தூர்தர்ஷன்  நேரலையில் ஒளிபரப்பியது. நூற்றுக்கணக்கான இசை நிபுணர்கள் ஒரே நேரத்தில் பாடிக் கொண்டிருந்தபோது திடீரென நேரலை ஒளிபரப்பை தூர்தர்ஷன் நிறுத்தியது. இதுகுறித்து ட்விட்டரில் கண்டனத்தை பதிவு செய்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூர்தர்ஷனின் நடவடிக்கை சிந்தனையற்றது, உணர்வுகளை மதிக்காத செயல் பதிவிட்டார். ஒரு சில விநாடிகள் பொறுக்க முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து, இது துரதிருஷ்ட வசமானது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரசார் பாரதி சிஇஓ வேம்பதி உறுதியளித்துள்ளார். தியாக பிரம்மம் எனப்படும் தியாகராயரின் ஆண்டு இசைக் கச்சேரி திருவையாறில் ஒரு வாரம் நடப்பது வழக்கம். இறுதி நாளில் பஞ்சரத்ன கீர்த்தனை என்ற தலைப்பில் நாட்டின் பிரபல இசைக் கலைஞர்கள் திருவையாறில் ஒரே நேரத்தில் பாடுவது விசேஷமாக கருதப்படுகிறது.