இந்தியா

தாதா தாவூத் சீரியஸ்! ஆஸ்பத்திரியில் அட்மிட்

தாதா தாவூத் சீரியஸ்! ஆஸ்பத்திரியில் அட்மிட்

webteam

இந்தியாவால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தாவூத், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இத்தகவல் முற்றிலும் தவறு என்றும் தாவூத் நலமாக உள்ளார் என்றும் அவரது உதவியாளர் சோட்டா ஷகீல் தெரிவித்துள்ளார்.

61 வயதான தாவூத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் தேடப்பட்டு வருபவர். இவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தந்துள்ளதற்கான ஆதாரங்களும் வெளியாகியிருந்தன.