இந்தியா

தனிமாநிலம் கோரி 8வது நாள் போராட்டம்: டார்ஜீலிங்கில் பதற்ற நிலை!

தனிமாநிலம் கோரி 8வது நாள் போராட்டம்: டார்ஜீலிங்கில் பதற்ற நிலை!

webteam

டார்ஜிலிங் மலைப் பகுதியை தனிமாநிலமாக அறிவிக்கக் கோரி காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மலைப் பகுதியை கூர்காலந்து என்ற தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி காலவரையற்ற கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் நடத்தும் போராட்டத்தினால், டார்ஜிலிங் மலைப்பகுதியில் 8வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.