இந்தியா

காவி நிறத்தில் அம்பேத்கர் சிலை: சர்ச்சையை அடுத்து மீண்டும் மாற்றம்!

காவி நிறத்தில் அம்பேத்கர் சிலை: சர்ச்சையை அடுத்து மீண்டும் மாற்றம்!

webteam

அம்பேத்கர் சிலை, காவி நிறத்தில் வைக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து மீண்டும் மாற்றப்பட்டது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாடான் நகரில் அம்பேத்கர் சிலை சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. தற்போது அந்தச் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. அப்போது வழக்கத்துக்கு மாறாக, காவி நிறத்தில் சிலை வைக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அம்பேத்கர் இயக்கங்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.  இதையடுத்து அந்தப் பகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஹேமந்த்ரா கவுதம், காவி நிறத்தை அழிக்க முடிவு செய்தார். அதன்படி இன்று நீல நிற பெயின்ட் அடிக்கப்பட்டு சிலை மாற்றப்பட்டது. 

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, காவி நிறம் மாநிலத்தின் முக்கிய அம்சமாக மாறிவிட்டது. முதல்வர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவகங்கள் காவி நிறத்துக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.