Biporjoy cyclone
Biporjoy cyclone Kunal Patil, PTI
இந்தியா

இன்று மாலை கரையை கடக்கும் 'பிபர்ஜோய்' புயல் - எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

PT WEB

புயல் கரையை கடப்பதையொட்டி சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கடும் சீற்றம் காணப்படும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து கட்ச் ஆட்சியர் அமித் அரோரா, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் இன்று மாலை 4 - 5 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 46,000-த்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 6 தேசிய பேரிடர் மீட்புப் படை, 3 ரயில்வே பாதுகாப்புப் படை குழுக்கள், 2 மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் மற்றும் ராணுவம் தயார் நிலையில் உள்ளன.

Biporjoy cyclone

20,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அனைத்து தங்குமிடங்களிலும் போதுமான அளவு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்படும் சேதங்களை அப்புறப்படுத்த 50 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக புயல் குறித்து முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புயலை எதிர்கொள்ள அரசுக்கு உதவ ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என தெரிவித்திருந்தார்.

புயலையொட்டி குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதி தீவிர மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.