அர்னாப் புயல் Reuters
இந்தியா

வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டம், புயலாக வலுப்பெற்று இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Premkumar S

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடந்த 24-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ’அர்னாப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு வங்க மொழியில், பெருங்கடல் என பொருள்.

கோப்புபடம்

அர்னாப் புயல் படிப்படியாக வலுவடைந்து, தீவிரப் புயலாகவும் அதிதீவிர புயலாகவும் வலுவடையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி அன்று, ஆந்திராவில் உள்ள பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது 115 கிலோ மீட்டர் முதல் 125 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில், காற்றின் வேகம் 140 கிலோ மீட்டர் வரை கூட இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதேசமயம், இந்தப் புயலால் தமிழகத்திற்கு நேரடியான எந்த பாதிப்பும் இல்லை என சுயதீன ஆய்வு ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.