சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும் அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சைக்கிள் சின்னத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என முலாயம் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உபி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதில் முலாயம் சிங்கிற்கும் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று அகிலேஷ் யாதவ் ஆதரவாளர் ராம்கோபாபால் யதாவ் சமாஜ்வாதி கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் முலாயம் சிங் நீக்கப்பட்டார். இந்தக் கூட்டம் சட்டவிரோதமானது என்று முலாயம் கூறினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் முலாயம் சிங் யாதவ் வரும் 5ம் தேதி கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்ட அழைப்பு விடுத்திருந்தார். தற்போது அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவ்பால்யாதவ் தெரிவித்துள்ளார்.
இதனைடையே தாம் எந்த ஒரு தவறும் செய்ததாக யாரும் குற்றம் சாட்டமுடியாது எனவும் ஊழல்களில் ஈடுபட்டது கிடையாது என்றும் முலாயம் கூறியுள்ளார். யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது என்றும் சைக்கிள் சின்னம் தங்களுடையது என்றும் அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.