இந்தியா

மகாராஷ்டிராவில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு - உத்தவ் தாக்கரே அறிவிப்பு

kaleelrahman

கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் இரண்டே முக்கால் லட்சம் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தையொட்டி பதிவாகும் நிலையில் வேறு வழியின்றி ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனாவின் 3ஆவது அலை ஏற்படுவதை தடுக்கும் கடமை மக்களுக்கு இருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா பரவல் விகிதம் 10 விழுக்காட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில் மட்டும் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் விகிதம் 20 சதவிகிதத்திற்கு மேல் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளே செல்லவோ, வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதியில்லை என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.