இந்தியா

விக்ரம் லேண்டரை கடக்கும் நாசாவின் ஆர்பிட்டர்: தகவல்கள் கிடைக்குமா?

webteam

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் இன்று புகைப்படம் எடுக்கவுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

இந்நிலையில் நாசா‌ கடந்த 2009 ஆம் ஆண்டு அனுப்பிய ஆர்ப்பிட்டர், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை இன்று கடக்கவுள்ளது. நாசாவின் புலனாய்வு ஆர்பிட்டர் நிலவைச்சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இது இன்று விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே கடந்து செல்லவுள்ளது. இதனால் அப்போது விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து நாசாவிற்கு அனுப்பவுள்ளது. மேலும் விக்ரம் லேண்டருடன் சமிக்ஞை ஏற்படுத்த முயற்சி செய்யப்படும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.