ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான அகமத்நகரில் உள்ள தாக்போரா - உமர்ஹேர் சாலையில் இன்று, இந்திய ராணுவத்தின் சி.ஆர்.பி.எப் வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, விபத்து நடந்தவுடன் அப்பகுதி மக்களும், பாதுகாப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் மூழ்கிய வாகனத்திலிருந்து 9 வீரர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
காயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிற்து.