உத்திரப்பிரதேசத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவரின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப்படை வீரரான ராஜீவ் என்பவர், விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார். சொந்த ஊர் வந்து ஐந்து நாள்களான நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ராஜீவின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.